நடிகர் அர்ஜுன் எழுதிய கதையில் தயாராகியிருக்கும் படம் “மார்ட்டின்”.

#TamilCinema #Actor #Director
Mani
3 years ago
நடிகர் அர்ஜுன் எழுதிய கதையில் தயாராகியிருக்கும் படம் “மார்ட்டின்”.

நடிகர் அர்ஜுன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் "மார்ட்டின்". தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்கிறார். இதை உதய் கே. மேத்தா தயாரித்துள்ளார்.

அதிக பொருட்செலவில் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பற்றி பேசிய துருவா சர்ஜா, "சினிமாவில் எனக்கு இன்ஸ்பிரேஷன் அங்கிள் அர்ஜுன். நான் கேட்டதால் 'மார்ட்டின்' கதையை உருவாக்கியது. ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நிறைய மாற்றங்களை செய்து இந்த கதையை உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் பெரிய வெற்றியாக இருக்கும்," என்றார்.

இதில் வைபவி சாண்டில்யா மற்றும் அன்வேஷி ஜெயின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத்குமார், நிகித்தின் திர், நவாப் ஷா, ரோஹித் பகத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே, இசை: மணிசர்மா.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4